top of page

அமெரிக்காவில் கொரோனாவால் குண்டாக இருப்பவர்கள் அதிகம் பலி:பாதித்தவர்களில் 90%பேருக்கு நேரும் பரிதாபம்


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு துவங்கிய மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உடல் பருமன் கொரோனா பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட பல மாகாணங்களிலும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டோர், இறந்தவர்கள் என்று கணக்கிட்டபோது, நூற்றுக்கு 90 சதவீதம் பேர் உடல் பருமனாக இருந்தவர்கள். 40 மற்றும் அதற்கு அதிகமாக பிஎம்ஐ என்று  சொல்லப்படும் உடல் மொத்த எடை.

‘பிஎம்ஐ 30க்கு மேல் இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். 40க்கு மேல் இருப்பவர்கள் கண்டிப்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அமெரிக்கா முழுவதும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.


0 views0 comments

Comments


bottom of page