top of page

'இரு முக்கிய ஒப்பந்தங்கள்' வாக்குறுதி அளித்த கமலா ஹாரீஸ்


தற்போதைய அதிபர் ட்ரெம்பின் செயல்பாடுகள் குறித்து, ஜோ பிடனும் கமலா ஹாரீஸூம் ஏராளமான செய்திகளைக் குறிப்பிட்டு பேசுகின்றனர். குறிப்பாக, கொரோனாவை ட்ரம்ப் கையாண்டுவரும் முறை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.

இரு தரப்பு கட்சியினரும் தங்களின் வாக்குறுதிகளை அறிவித்து மக்களின் வாக்குகளை ஈர்த்து வருகின்றனர். அதன்படி நேற்றைய பிரச்சாரத்தில் கமலா ஹாரீஸ் முக்கிய இரு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.தங்கள் கட்சிக்கு வாக்கு அளித்து அதிகாரத்தில் அமரச் செய்தால், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று குறிப்பிட்டார். மேலும், ஈரான் அணுசக்தி ஒப்பந்ததில் அமெரிக்கா தன்னை இணைத்துக்கொள்ளும் என்றும் உறுதிமொழி அளித்துள்ளார்.பருவநிலை மாற்றத்தைக் கவனித்து வருபவர்களுக்கும் அதுகுறித்து செயல்படுபவர்களுக்கும் கமலா ஹாரீஸின் வாக்குறுதி நம்பிக்கை அளிக்கும் என நம்பலாம். ஆனால், இவை வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

1 view0 comments

Commentaires


bottom of page