top of page

குவைத்தில் விசா காலம் நீட்டிப்பு


குவைத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த மாதத்துடன் விசா காலம் முடிவடைபவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் மூன்று மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டது.

அமைச்சகத்தின் இணையதளத்தில் நீட்டிப்புக் காலம் மாற்றப்படும். விசா காலத்தை நீட்டிப்பிற்காக மக்கள் வருகை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்றால் விசா அலுவகங்கள் மூடப்பட்டதால் முதற்கட்டமாக மார்ச்-மே வரையும், இரண்டாம் கட்டமாக ஜூன்-ஆகஸ்ட் வரையும் நீட்டித்து உத்தரவிட்டது. தற்போது, மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது.

குவைத்தின் மக்கள் தொகையில் 70 சதவீத மக்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 view0 comments

Comments


bottom of page