top of page

"சும்மா கூட்டிட்டு போய் சோறு போட முடியலே" -சிம்டம்ஸ் தெரிஞ்சாதான் சோதனை


கொரானா பரிசோதனை விஷயத்தில் இதற்கு முன்பு இருந்த நடைமுறைகளிருந்து இப்போது சற்றே சில மாற்றங்களை செய்து சுகாதார செயலர் ராதாகிருஷ்னன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .அதன்படி இனி கொரானா தொற்றுக்கு ஆளானவருடன் தொடர்பிலிருந்தவருக்கு அறிகுறிகள் இருந்தால்தான் அவர்களை பரிசோதிக்க அழைத்து போவோமென்றும் ,வெளிநாடுகளிலிருந்து வைரஸ் டெஸ்ட் முடிவுகள் இல்லாமல் வருவோருக்கு இங்கு பரிசோதனை கட்டாயம் செய்யப்படவேண்டுமென்றும் ,வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமையிலிருக்கவேண்டுமென்றும் .அவர்களில் அறிகுறியுள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதிக்க வேண்டுமென்றும் ,வியாபார விஷயமாக வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் மூன்று நாட்களில் திரும்பினால் அவர்களுக்கு டெஸ்ட் தேவையில்லை என்றும் ,கட்டுப்பாடு பகுதியில் தினசரி கிருமி நாசினி தெளிக்கப்படுமென்றும் வெளிநாட்டிலிருந்து வருவோர் நோய் தொற்றில்லையென்றாலும் 14 நாட்கள் தனிமையிலிருக்க வேண்டுமென்றும் ,தொற்று பதித்தவர்களை மூன்று கேட்டகிரியாக பிரித்து அதாவது தீவிர பாதிப்பு ,லேசான பாதிப்பு ,இணை நோய் பாதிப்பு என பிரித்து சிகிச்சையளிக்கப்படுமென்றும் கூறினார் .

0 views0 comments

Comentários


bottom of page