top of page

ஜி.எஸ்.டி பாக்கி ரூ.12250.5 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்!


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள முக்கியமான நிதி சிக்கல்களில் ஒன்று ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு ஏற்படும் குறுகிய கால பாதிப்பை எதிர்கொள்வதற்கான இழப்பீட்டை வழங்கப்படாமல் இருப்பதுதான் என்பதை அறிவீர்கள்.எந்தெந்த வருவாய் இழப்புகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அளித்த தெளிவான உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்த ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இத்தகைய இழப்பீடு வழங்குவதை 101வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி (மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) சட்டம் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

1 view0 comments

Comments


bottom of page