top of page

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் மதுரை மாணவர்கள் அசத்தல்



மதுரை மாவட்டம், மேலுரைச் சேர்ந்த இரட்டையர் பாலகுமார்; பாலசந்தர், 17. அரசு இரு பாலர் பள்ளியில், பிளஸ் 2 படிக்கின்றனர். இவர்கள், போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.சிறு வயதில் விபத்தில் காயமுற்ற தந்தை, ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் இறந்தார். இதன் காரணமாகவே, 'தானியங்கி சிக்னலை கண்டுபிடித்தோம்' என்றனர்.அவர்கள் கூறியதாவது:உயிருக்கு போராடுபவர்களை ஏற்றி, ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், சிக்னலுக்கு, 2 கி.மீ., துாரம் முன், அதில் உள்ள ஜி.பி.எஸ்., கருவி மூலம், கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., வந்து விடும்.இதையடுத்து, 'சர்க்யூட் போர்டு' தானாக இயங்க ஆரம்பித்து, சாலையோர சிக்னல் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், 'ஆம்புலன்ஸ் வருகிறது; வழி விடுங்கள்' என தெரிவிப்பதோடு, ஊதா நிறத்தில் விளக்கு ஒளிரும்.சிக்னலை ஆம்புலன்ஸ் கடந்ததும், மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., சென்று, ஒலிபரப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

0 views0 comments

Comments


bottom of page