top of page

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது - தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்



சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மதுரை, விருதுநகர், சேலம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை ஆங்காங்கே பெய்தாலும் பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலுக்கு நடுவே சில நேரங்களில் மழை பெய்து மகிழ்விக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்குடி, லப்பைக்குடிக்காடு, தேவாலா, தாமரைப்பாக்கம், திருத்தணியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரை, விருதுநகர், சேலம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.

கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

source: oneindia.com

2 views0 comments

Comentários


bottom of page