top of page

பாரதியார், அண்ணா பல்கலை.,களில் சிறப்பு கொரோனா வார்டுகள் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்


இதுவரையில் 13,398 பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கோவையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டார். அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகங்களில், படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'கோவையில் #COVID19 தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக, பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு விடுதியில் சுமார் 450 படுக்கைகளுடனும், அண்ணா பல்கலைக்கழக மண்டல மாணவர் விடுதியில் சுமார் 200 படுக்கைகளுடனும் #COVID19Care மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

COVID19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, #ESI மருத்துவமனை & #CODISSIA வளாகம் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 views0 comments

Comments


bottom of page