top of page

முந்தைய அதிபர்களை காட்டிலும் தற்போதைய அதிபர் டிரம்ப், இந்தியா-அமெரிக்கா உறவு.



முந்தைய அதிபர்களை காட்டிலும் தற்போதைய அதிபர் டிரம்ப், இந்தியா-அமெரிக்கா உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா -இந்தியா நல்லுறவுக்கு டிரம்ப் முன்னுரிமை கொடுப்பதாகவும், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடனான உறவை அனைத்து நிலைகளிலும் மேம்படுத்த தீவிரமாக பணியாற்றியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.


வரும் காலங்களிலும் அமெரிக்கா-இந்தியா நல்லுறவை டிரம்ப் மேம்படுத்துவார் என்ற அந்த அதிகாரி, ஒப்பந்தமில்லாத கூட்டாளி அந்தஸ்தை இந்தியாவுக்கு முதன்முதலாக அவர்தான் அளித்தார் எனவும், டிரம்ப் அதிபரான பிறகு வெள்ளை மாளிகை வந்த வெளிநாட்டுத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் எனவும் தெரிவித்தார்.


1 view0 comments

Comentarios


bottom of page