top of page

லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து தனது படைகளை விலக்காமல் பிடிவாதமாக இருக்கும் சீனா.


லடாக் கட்டுப்பாட்டு எல்லை முன்களப் பகுதிகளில் இருந்து தனது படைகளை விலக்காமல் பிடிவாதமாக இருக்கும் சீனாவுக்கு, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


சீன விவகாரம் தொடர்பான உச்சமட்ட ஆய்வுக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், லடாக்கில் சீனா நடத்திய அத்துமீறல், திபெத் அக்சாய் சின் பகுதியில் சீனா குவித்துள்ள படைகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.


சீன நிறுவனமான ஹுவாவேய் உளவு வேலையில் ஈடுபட்டதாக அதன் மீது அமெரிக்க தடை விதித்துள்ளதை போன்று இந்தியாவும் வருங்கால தொலைத் தொடர்பு திட்டங்களில் இருந்து சீன நிறுவனங்களை விலக்கி வைக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


1 view0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
bottom of page