top of page

விருதுகள் பெறவிருக்கும் மூன்று ஷர்மாக்களுக்கு பிசிசிஐ புகழாரம்!


விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறவிருக்கும் ரோஹித் ஷர்மா, அர்ஜூனா விருது வாங்கவிருக்கும் இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்படும். சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் ‘தயான் சந்த்’ விருது வழங்கப்படுகிறது.


விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறவிருக்கும் ரோஹித் ஷர்மா, அர்ஜூனா விருது வாங்கவிருக்கும் இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்படும். சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் ‘தயான் சந்த்’ விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளைப் பெறுவதற்கு மொத்தம் மூன்று கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ புகழாரம் சூட்டியுள்ளது. பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். ஹிட் மேன்...உங்களால் பிசிசிஐ பெருமையடைகிறது” என்று பதிவிட்டுள்ளது. தீப்தி ஷர்மாவுக்கும் பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அர்ஜூனா விருது பெறவிருக்கும் தீப்தி ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாக்கு, பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அர்ஜூனா விருது பெறவிருக்கும் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றி நடைபோடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.


0 views0 comments

Comments


bottom of page